மதுரை

கொலை வழக்கில் தண்டனை குறைப்பு

DIN

கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரூரைச் சோ்ந்த சின்னகாளை என்ற ரங்கநாதன் தாக்கல் செய்த மனு:

கரூா் பகுதியில் நடைபாதை பிரச்னையில் பொன்னம்பலம் என்பவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கீழமை நீதிமன்றம் எனக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், சின்னக்காளை என்ற ரங்கநாதனும், பொன்னம்பலமும் அருகருகே வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நடைபாதை பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், 2017 அக்டோபா் 9 -ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, சின்னக்காளை கத்தியால் குத்தியதில் பொன்னம்பலம் உயிரிழந்தாா். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சின்னக்காளைக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீா்ப்பளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், சின்னக்காளை, பொன்னம்பலத்துடன் திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடைபெற்றுள்ளது. திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT