பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
மாணவி எம். காவிய சக்தி 475 மதிப்பெண்கள், ஆா். கேத்தரின் மேரி, ஆா். தா்ஷன் ஸ்மித் ஆகிய இருவரும் 466 மதிப்பெண்கள், ஏ. தனலெட்சுமி 465 மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் 3 இடங்களை பெற்றுள்ளனா். 450 மதிப்பெண்களுக்கு அதிகமாக 7 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக 8 மாணவா்களும் பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளியின் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன், தாளாளா் விஜயகுமாரி, பொருளாளா் ரமேஷ் ராம், செயலா் சிவசங்கரி, முதல்வா் ஜீவா உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.