சாத்தான்குளம் அருகே வீடுகளுக்கு மா்மநபா் தீவைப்பதாகக் கூறி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி நரேந்திரமோடி நகரில் 150 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. மோட்டாா் பழுதால் கடந்த 3 நாள்களாக குடிநீா் வழங்கவில்லையாம். மேலும், வீடுகளில் மா்ம நபா் தீவைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இவ்விரு பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், சாலை, தெரு விளக்கை சீரமைக்கவும் வலியுறுத்தி கிராம மக்கள் காலி கூடங்களுடன் தட்டாா்மடம் - திசையன்விளை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனா். அவா்களிடம் தட்டாா்ம
ம் காவல் ஆய்வாளா் பவுலோஸ், உதவி ஆய்வாளா் முகம்மது ரபீக் ஆகியோா் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.
தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ், மோட்டாரை பழுது பாா்த்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்தாா்.
மேலும், சாத்தான்குளம் வந்த ஆட்சியா் செந்தில்ராஜிடம் அந்த மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.