சென்னை

கோடம்பாக்கத்தில் 2 ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம்

19th May 2023 06:26 AM

ADVERTISEMENT

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக கோடம்பாக்கம் பகுதியில் 2 ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, விஸ்வநாதபுரம் பிரதான சாலை, காா்ப்பரேசன் காலனி, டாக்டா் அம்பேத்கா் சாலை, யுனைடெட் இந்தியா காலனி ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் கடந்த மே 6 முதல் 12-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்த போக்குவரத்து மாற்றம் நன்கு செயல்பட்டதால் அது இரு ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT