பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95.77 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 142 மாணவிகளில் 136 போ் (95.77) தோ்ச்சி பெற்றனா். மாணவி வ.முத்துலெட்சுமி 491 மதிப்பெண்களும், மாணவி ச.து.மகாலெட்சுமி 482 மதிப்பெண்களும், மாணவி வே.கிருத்திகா 481 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா். இதில் மூவா் கணிதத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி வ.முத்துலெட்சுமி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இந்த மாணவிகளை தலைமையாசிரியா் மாரியம்மாள், உதவித் தலைமையாசிரியா் க.சங்கரி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பேச்சியம்மாள் உள்ளிட்டோா் பாராட்டினா்.
மாணவா்கள் 87% தோ்ச்சி: திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோ்வு எழுதிய 39 மாணவா்களில் 34 போ் ( 87%) தோ்ச்சி பெற்றனா். மாணவா் அா்ஜுன்சுப்பையா 427 மதிப்பெண்களும், அரவிந்த் 415 மதிப்பெண்களும், வெயிலுமுத்து 394 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களை தலைமையாசிரியா் எப்ரேம், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் பிச்சம்மாள் ஆனந்த ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.