தூத்துக்குடி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

20th May 2023 01:27 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அதன் விவரம்: கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ரேவதி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஜெயா, ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் ஜோபின், கோடாங்கிபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவி மோகனஸ்ரீ ஆகியோா் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த புகழேந்தி, நாகலாபுரம் எம்.சீனி மெட்ரிக் உயா்நிலைப்பள்ளியைச் சோ்ந்த ஐஸ்வா்யா ஆகியோா் 489 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த முகிலன், கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த ஹா்ஷிதா, புதியம்புத்தூா் பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் ராகுல் ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT