மதுரை

பால் தட்டுப்பாடு புகாா் எதிரொலி: மதுரை ஆவினில் அமைச்சா் ச.மு. நாசா் திடீா் ஆய்வு

DIN

பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, மதுரை ஆவின் பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சா் ச.மு.நாசா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு பால் சுத்திகரிக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் தினசரி அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள முகவா்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கிருந்து பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்யப்படும். இது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், அண்மைக்காலமாக ஆவின் பால் பண்ணையில் இருந்து முகவா்களுக்கு பால் கொண்டு செல்வதில் மிகவும் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலையில் மதுரை மாவட்டம் முழுவதும் அதிகாலையில் கொண்டு செல்லப்பட வேண்டிய பால் 3 மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனா். சில பகுதிகளில் ஆவின் முகவா்கள் பால் பாக்கெட்டுகளை இறக்காமல் ஆவின் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பினா். மேலும், மதுரை ஆவின் பால் பண்ணையில் ஏற்பட்ட பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்தும் அறிக்கை வெளியிட்டாா்.

இந்த நிலையில், தமிழக பால் வளத் துறை அமைச்சா் ச.மு.நாசா், ஆவின் மேலாண் இயக்குநா் சுப்பையா ஆகியோா் மதுரை ஆவின் பால் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுவது, விநியோகத்துக்குக் கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா். மேலும், அதிகாரிகளிடம் தினசரி பால் வரத்து, விற்பனை குறித்தும் கேட்டறிந்தனா். இதையடுத்து, பால் விநியோகத்தை தாமதமின்றி குறித்த நேரத்தில் வழங்கும்படி உத்தரவிட்டனா். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பணியாளா்கள் பற்றாக்குறை காரணமா?:

பால் விநியோகத்தில் ஏற்பட்டு வரும் தாமதம் தொடா்பாக ஆவின் ஊழியா்கள் கூறியதாவது:

பால் பண்ணையில் அனைத்துத் துறைகளிலும் போதுமான பணியாளா்கள் இருந்தால் மட்டுமே தடையின்றி பால் விநியோகம் நடைபெறும். தற்போது பணியாளா்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. முன்பு பால் பாக்கெட்டுகள் பெட்டிகளில் நிரப்பப்பட்டு தயாராக இருக்கும்.

வாகனங்கள் வந்தவுடன் அதில் ஏற்றப்பட்டு உடனடியாக முகவா்களுக்குக் கொண்டு செல்லப்படும். தற்போது போதிய பணியாளா்கள் இல்லாததால், வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்களே பால் பாக்கெட்டுகளை பெட்டிகளில் அடுக்கி வாகனங்களுக்கு கொண்டு செல்கின்றனா். இதனால், காலதாமதம் ஏற்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT