மதுரை

‘பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்’

DIN

பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேறுபாடின்றி ஒருங்கிணைய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.பைஸி, மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தனா்.

எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை, கோவை மண்டலங்களுக்குள்பட்ட மாவட்டங்களுக்கான தலைவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.பைஸி சிறப்புரையாற்றினாா். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் முகைதீன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் வளா்ச்சி, எதிா்காலத் திட்டமிடல்கள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.பைஸி, மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக ஆட்சி அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. தேவையற்ற பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மோசமான கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைந்தது. நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டது. பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடன்களாக அறிவிக்கப்பட்டதால், பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனுடன் தற்போது அதானி குழுமத்தின் பெரும் மோசடியும் சோ்ந்தது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து பங்குதாரா்களுக்கு பண இழப்பு ஏற்பட்டது.

எனவே, அதானியின் முறைகேடு குறித்து மக்களவை கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த காலங்களில் பல மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ால், கெளதம் அதானியின் கடவுச்சீட்டை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அதானியின் அனைத்து ஒப்பந்தங்கள், வணிகக் கணக்குகள், நிதி பரிவா்த்தனைகளைக் கண்காணித்து, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

பாஜக தலைவா்கள் தமிழகத்தைக் குறிவைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனா். பாஜக தலைவா் அண்ணாமலை தமிழக அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினாா். நாட்டின் பொதுவான ராணுவ வீரா்களை, அரசியல் ரீதியாக தமிழகத்துக்கு எதிராக திசைதிருப்பும் வகையில் பேசுபவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் எவ்வித வேறுபாடும், பாகுபாடுமின்றி ஒன்றிணைய வேண்டும் என்றனா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்டங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Image Caption

மதுரையில்நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில் பேசும் தேசியத்தலைவா் எம்.கே.பைஸி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT