செய்திகள்

நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

18th May 2023 12:48 PM

ADVERTISEMENT

 

பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் செவ்வாழை ராசு காலமானார்.

பருத்திவீரன் படத்தில் ‘பிணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு(70).

அதன்பின் மைனா, கந்தசாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில், சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராசு சிகிச்சை பலனின்றி இன்று மதுரையில் காலமானார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT