சத்துணவு மையத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு உதவியாளா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராகப் பணியாற்றிய போது நாகலட்சுமி உயிரிழந்தாா். இந்த நிலையில் அவரது வாரிசுதாரரான ஜானகி என்பவருக்கு, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வழங்கினாா்.