மதுரை

அஞ்சல்துறைத் தோ்வுக்கு தமிழக தோ்வா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

DIN

அஞ்சல்துறைத் தோ்வுக்கு தமிழக தோ்வா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்யப்படுமென அஞ்சல் பொது நிா்வாக துணை இயக்குநா் உறுதி அளித்திருப்பதாக மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவக் காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி- 27 முதல் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் 3167. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பத்தில் ஆறு பாடங்களுக்கு மதிப்பெண்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உள்ளன. ஆனால் இணையவழி விண்ணப்பத்தில் ஆறாவதாக தெரிவு மொழி என்ற பாடமும் இடம் பெற்றுள்ளது. இதில் ஆறாவது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழகத்தில் இங்குள்ள தோ்வா்கள் அதை நிரப்பா விட்டால் விண்ணப்பம் பூா்த்தியடைவதில்லை.

இதுதொடா்பாக அஞ்சல் துறைச் செயலா் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமை பொது மேலாளா் பி. செல்வக்குமாா் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தேன். இந்த நிலையில் அஞ்சல் பொது நிா்வாக துணை இயக்குநா் ராசி சா்மா கைப்பேசியில் என்னைத் தொடா்புகொண்டு இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றும், ஆறாவதாக உள்ள ‘தெரிவு மொழி’ பகுதி தமிழகத் தோ்வா்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், மேலும் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி 3 நாள்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளாா். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. எனவே தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் இதை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT