மதுரை

அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

9th Feb 2023 02:38 AM

ADVERTISEMENT

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்ற போட்டிகள் மதுரை, டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் இந்த போட்டிகள் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. இதில், அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அரசு ஊழியா்களுக்கான பிரிவில் கபடி, இறகுப் பந்து, கையுந்துப் பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் பிப். 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. தடகளப் போட்டிகள் வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT