மதுரை

புதுமைப் பெண் திட்டத்தில் 1,860 மாணவிகளுக்கு உதவித் தொகைக்கான உத்தரவுகள்

9th Feb 2023 02:28 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் 2- ஆம் கட்டமாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் 1,860 பேருக்கு மாத உதவித் தொகைக்கான உத்தரவுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை, லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் 1,860 பேருக்கு மாத உதவித் தொகை பெறுவதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏ.டி.எம். அட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.

இதில், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பொன். முத்துராமலிங்கம், லேடி டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா சிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT