மதுரை

மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி

DIN

மதுரை கோ.புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான ஆளுமைத் திறன் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். முதுகலை இயற்பியல் ஆசிரியா் முகமது ரபி முன்னிலை வகித்தாா். பேச்சாளா் சிக்கந்தா் சுல்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களின் ஆளுமைத் திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பேச்சாற்றலை மேம்படுத்துதல் குறித்து சிறப்புரையாற்றினாா்.

மேலும், 10, 11, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி வாரியாக முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவா்கள், கற்றலில் பின்தங்கிய மாணவா்களின் தோ்ச்சிக்கு உதவும் பொருட்டு கல்வி நண்பா்கள் குழு இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பயிற்சியில் உதவித் தலைமையாசிரியா்கள் ஜாகிா் உசேன், ரஹ்மத்துல்லா, முதுகலை வணிகவியல் ஆசிரியா் செய்யது இப்ராஹிம் ரஹ்மான், தமிழாசிரியா் தெளபீக் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT