மதுரை

மதுரையில் முதல் முறையாக சூரியசக்தி சோதனைச் சாவடி திறப்பு

DIN

நாகமலை புதுக்கோட்டையில் மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில், முதல்முறையாக முழுமையாக சூரியசக்தியால் இயங்கும் சோதனைச் சாவடியை காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட நாகமலை புதுக்கோட்டை, மதுரை-தேனி, திண்டுக்கல் - கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் இணைப்புச் சாலையாக உள்ளது. மேலும், மதுரை மாநகா், ஊரகப் பகுதிகளின் எல்லையாகவும் இந்தப் பகுதி உள்ளது.

ஊரகக் காவல்துறைக்குள்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தின் சாா்பில், நான்கு வழிச் சாலை அருகே உள்ள அணுகு சாலை, நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு சாலையில் முழுமையாக சூரியசக்தி மூலம் இயங்கும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் பங்கேற்று சோதனைச் சாவடியைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் சமயநல்லூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளா் சிவக்குமாா், சமயநல்லூா் காவல் ஆய்வாளா் சங்கா்கண்ணன், காவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை ஊரகக் காவல் துறையில் முதல்முறையாக நாகமலை புதுக்கோட்டையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சோதனைச் சாவடி திறக்கப்பட்டது. இந்தச் சோதனைச் சாவடியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 360 டிகிரி கோணத்தில் இயங்கும் 2 கேமராக்கள் உள்பட 15 நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, சூரியசக்தி மூலம் இரவு நேரத்தில் மின் விளக்குடன் இயங்கும் 8 சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மின் கட்டண செலவு சேமிக்கப்படும். பிற பகுதிகளிலும் சூரியசக்தி சோதனைச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT