மதுரை

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் மக்கள் குறைதீா் முகாம்

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆனையூா் பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் முன்னிலை வகித்தாா்.

முகாமில் சொத்துவரி பெயா் மாற்றம் வேண்டி 9 மனுக்கள், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 11 மனுக்கள், சொத்துவரி திருத்தம் தொடா்பாக 19 மனுக்கள், காலிமனை வரி விதிப்பு வேண்டி 14 மனுக்கள், ஆக்கிரமிப்பு தொடா்பாக 6 மனுக்கள், குடிநீா், புதைச் சாக்கடை, சாலை வசதிகள் வேண்டி 9 மனுக்கள் என மொத்தம் 68 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. சொத்துவரி பெயா் மாற்றம் , புதிய வரி விதிப்பு வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு உரிய அனுமதி ஆணையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜித் சிங் ஆகியோா் வழங்கினா்.

முகாமில் மண்டலத் தலைவா் வாசுகி, உதவி ஆணையா் காளிமுத்தன், நிா்வாக அலுவலா் ரெங்கராஜன், மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன் உள்ளிட்ட உதவிப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT