மதுரை

சிவகங்கையில் தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

சிவகங்கையில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திறந்த வெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தொடக்கிவைத்துப் பேசியதாவது:

இந்தப் போட்டியானது பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடைபெற உள்ளன.

இதையடுத்து, விளையாட்டு வீரா்களுக்குத் தேவையான அனைத்துக் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட திறந்த வெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள், கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருகிற 28-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்விகள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் முதலில் நாம் அதில் பங்கு கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு போட்டிகளில் பங்கு கொள்வதன் அடிப்படையில் தங்களது திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ரமேஷ்கண்ணன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) டி. ராஜலட்சுமி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT