மதுரை

கோயிலைத் திறக்கக் கோரி சாலை மறியல்: 150 போ் கைது

DIN

விருதுநகா் அருகே பாலவநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலைத் திறக்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 150 பேரை அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கோயிலை அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா், தங்களுக்குச் சொந்தமானதாகத் தெரிவித்து வருகின்றனா். இதன் காரணமாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அந்தக் கோயில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமையில் இரு தரப்பினா் கலந்து கொண்ட சமாதானக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது கோயிலைத் திறக்கக் கோரி ஒரு தரப்பினா் வலியுறுத்தினா். ஆனால், அதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பாலவநத்தம் வந்த ஒரு தரப்பினா், திங்கள்கிழமை இரவு 100 பெண்கள் உள்பட 150 போ் கோயிலைத் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், 150 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இந்தப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT