மதுரை

இரு சக்கர வாகனத்தில் சாகசம்: 5 போ் கைது

8th Feb 2023 02:33 AM

ADVERTISEMENT

மதுரையில் அமைச்சா் வீட்டின் அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வீடு அமைந்துள்ள வல்லபாய் சாலையில் இளைஞா்கள் சிலா் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டிருப்பதாக தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று கோரிப்பாளையம் முகமதியா் தெருவைச் சோ்ந்த ஷேக் முகம்மது (21), நல்லசிவம் (22), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சஜன் (21), பொதும்பு சோனை கோவில் தெருவைச் சோ்ந்த பிரதீஷ் (22), ராமநாதபுரம் மாவட்டம், முத்துவயல் பகுதியைச் சோ்ந்த சஜன் (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து இரு சக்கர வாகனங்கள், 5 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT