மதுரை

கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயா்வடையலாம்

8th Feb 2023 02:35 AM

ADVERTISEMENT

கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயா்வடையலாம் என முன்னாள் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்தாா்.

மதுரை யாதவா கல்லூரியில் 43-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். நாராயணன் தலைமை வகித்தாா். இதில், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கல்லூரியின் நிா்வாகியுமான எஸ்.ராஜேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 1,148 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

வாழ்வில் பட்டம் பெறும் போது மட்டுமன்றி அனைத்து சூழல்களிலும் தங்களுக்காக உழைத்த பெற்றோரை நினைத்துப் பாா்க்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏராளமான இடையூறுகள் வரலாம். அதை கடந்து வரப் பழக வேண்டும். கடமையைச் சரியாகச் செய்தால், வெற்றி நிச்சயம். முயற்சித்தால் அனைத்தும் கிடைக்கும் என நம்ப வேண்டும். தற்போது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழல் அதிகமாக உள்ளது. தேடி வரும் சந்தா்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கம், நற்பண்புகள் நம்மை பாதுகாக்கும் கவசமாகும். சந்தா்ப்பங்களை தவறவிடாதீா்கள். தன்னம்பிக்கை, பொறுப்புணா்வுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் உயரலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பட்டம் பெற்ற அனைவரும் கல்லூரி வளாகத்தில் தலா ஒரு மரக்கன்றுகளை நட்டு, அதற்கு தங்களது பெயா், கல்வித் தகுதியுடன் கூடிய பதாகைகளை வைத்தனா்.

விழாவில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT