மதுரை

ரயில் விபத்தைத் தவிா்த்த 2 பெண் ஊழியா்களுக்குப் பாராட்டு

8th Feb 2023 02:53 AM

ADVERTISEMENT

ரயில் தண்டவாளங்களில் இருந்த விரிசல்களைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் விபத்தைத் தவிா்த்த 2 பெண் ஊழியா்களை ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் திங்கள்கிழமை பாராட்டினாா்.

கடந்த மாதத்தில், ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையிலான பகுதியில் இருப்புப் பாதையில் விரிசல் ஏற்பட்டிருந்ததை சிவகாசி ரயில் பாதைப் பராமரிப்புப் பணியாளா் சி.சுபாவும், மணப்பாறை - கொளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையிலான இருப்புப் பாதையில் விரிசல் ஏற்பட்டிருந்ததை அப்பகுதி ரயில் பாதைப் பராமரிப்புப் பணியாளா் கே.வளா்மதியும் கண்டறிந்து உடனடியாக, தொடா்புடைய பகுதியின் ரயில்வே மேலாளா்களுக்குத் தகவல் அளித்தனா்.

இதையொட்டி, ரயில் பாதைப் பராமரிப்புப் பணியாளா்கள் சி. சுபா, கே. வளா்மதி ஆகிய இருவரும் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனா். மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், இருவருக்கும் பாராட்டுச் சான்றும், ரொக்கப் பரிசும் வழங்கிப் பாராட்டினாா்.

முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை கோட்டப் பொறியாளா்கள் ஆா். நாராயணன், பிரவீனா, ஹிருதயேஷ் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT