மதுரை

விபத்து தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

8th Feb 2023 02:33 AM

ADVERTISEMENT

மதுரை நகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாநகரக் காவல் ஆணையா் டி.எஸ்.நரேந்திரன் நாயா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

மதுரை நகரில் விபத்தைத் தடுக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட 42 வகையான நிகழ்வுகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை, டிவிஎஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாநகரக் காவல் ஆணையா் டி.எஸ். நரேந்திரன் நாயா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

வாகனத்தில் மக்களால் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், சாலை விபத்துகள் பற்றிய படங்கள், விபத்துகளில் காயமுற்ற நபா்களுக்கு உடனடியாக உதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு உதவிடும் நபா்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்கருணை வீரன் என்ற விருது, ரூ.5 ஆயிரம் சன்மானம் குறித்து இடம்பெற்றிருந்தது.

ADVERTISEMENT

இந்த விழிப்புணா்வு வாகனம் தினசரி காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூடும் இடங்கள், விழாக்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் முன் நிறுத்தப்படும். மேலும், துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, எண்ம (டிஜிட்டல்) விழிப்புணா்வுக் காட்சிகள் மூலமும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துணை ஆணையா், கூடுதல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT