மதுரை

பழுதடைந்த தொகுப்பு வீடுகளைக் கணக்கிடும் பணி

8th Feb 2023 02:53 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை கணக்கிடும் பணி தொடங்கப்படவுள்ளது. இந்தப் பணிக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆதிதிராவிடா் வீட்டு வசதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ், 1985-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகளில், மக்கள் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில் மிக மோசமாக பழுதடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை (பிப். 8) தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன சமுதாய வள பயிற்றுநா்கள் மூலம் இந்தக் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

பணி சிறந்த முறையில் நிறைவேற, அனைத்து ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT