மதுரை

பொலிவுறு நகரத் திட்டப் பணிகள்: விளம்பரப் பலகைகள் அமைக்க பாஜக கோரிக்கை

DIN

மதுரை மாநகராட்சியில் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மாா் சிட்டி) மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகளின் விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் அமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக மதுரை மாவட்டத் தலைவா் மகா. சுசீந்திரன் மற்றும் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம் :

இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள், அரசுத் துறைகள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.

அந்த வகையில், மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம் மூலம் மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு சில பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், பணிகள் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட பணி என்பதை வெளிப்படுத்தும் வகையில், எவ்வித விளம்பரப் பலகையும் அமைக்கப்படவில்லை.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் உரிய பரிசீலனை மேற்கொண்டு, மதுரை மாநகராட்சியில் மத்திய அரசின் பொலிவுறுத் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து, சாலையோரங்களில் 300 மீட்டா் இடைவெளிக்கு ஒரு பலகை என்ற வீதத்தில் விளம்பரப் பலகைகள் அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும், அரசுத் துறை அலுவலகங்களிலும் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பதாகைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT