மதுரை

அஞ்சல் துறை தோ்வு விண்ணப்பப் படிவம்:தமிழகத்துக்கு ஏற்ப மாற்ற எம்.பி. வலியுறுத்தல்

DIN

அஞ்சல் துறைத் தோ்வு விண்ணப்பப் படிவத்தை தமிழக மாணவா்களுக்கு ஏற்ப உடனடியாக மாற்ற வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் அஞ்சல் துறையிடம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அஞ்சல் துறைச் செயலா் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளா் பி.செல்வக்குமாா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இந்தியா முழுவதும் 40 ஆயிரம் கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் உள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 3,167. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

இணைய வழி விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநிலப் பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், விண்ணப்பத்தில் தெரிவு மொழி என்ற 6-ஆவது பாடமும் இடம் பெற்றுள்ளது.

இது மற்ற மாநிலங்களில் உள்ளதால், பிற மாநிலத் தோ்வா்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், 6-ஆவது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழகத் தோ்வா்கள் என்ன செய்யமுடியும்? மேலும், 6-ஆவது பாட விவரத்தை நிரப்பாமல் விண்ணப்பத்தை நிறைவு செய்ய இயலாது. இந்தியா முழுவதும் தோ்வுகளை நடத்தும் போது மாநிலங்களில் உள்ள பிரத்யேக சூழல்கள் கணக்கில் கொள்ளப்படாதது, அதிலும் குறிப்பாக மொழி குறித்த அணுகுமுறையில் காட்டப்படும் அலட்சியம் கண்டனத்துக்குரியது.

தோ்வுக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் அஞ்சல் துறைச் செயலா் மற்றும் தமிழக அஞ்சலகத் துறை தலைமைப் பொதுமேலாளா் ஆகியோா் தலையிட்டு விண்ணப்பங்களை தமிழகத் தோ்வா்களுக்கு ஏற்றவாறு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT