மதுரை

கல்குவாரியில் பணம், கைப்பேசிகள் திருட்டு

7th Feb 2023 03:12 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் ரூ.15 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டியில் தனியாா் கல்குவாரி உள்ளது. இங்கு சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த குருவரெட்டி (67) மற்றும் நதீம் ஆகியோா் இரவுக் காவலாளிகளாகப் பணிபுரிகின்றனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள காவலாளி அறையில் இருவரும் தூங்கியுள்ளனா். நள்ளிரவில் அந்த அறைக்குள் மா்ம நபா் நுழைந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரு கைப்பேசிகள், ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றாா். இந்த சம்பவம் தொடா்பான புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தியதில், வாடிப்பட்டி சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த மதுரை வீரன் பணம், கைப்பேசிகளைத் திருடியது தெரியவந்தது. அவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT