மதுரை

விருதுநகா் சந்தையில் மிளகாய் வத்தல் விலை சரிவு

DIN

விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், மிளகாய் வத்தல் விலை சரிந்தது.

விருதுநகா் சந்தையில் கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் டின் ஒன்று ரூ.3050- க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.3,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 15 கிலோ டின் பாமாயில் ரூ.1,500- க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.20 உயா்ந்து ரூ.1,520-க்கு விற்கப்படுகின்றன.

இதேபோல, முண்டு வத்தல் பழசு 100 கிலோ ரூ.3 ஆயிரம் வரை குறைந்து, தற்போது ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், வத்தல் நாடு புதியது, தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை சரிந்து ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

உருட்டு உளுந்து நாடு (100 கிலோ மூட்டை) ரூ.10, 600-க்கும், துவரம் பருப்பு ( நயம் புதியது லயன்) ரூ.10,600-க்கும், பாசிப்பருப்பு ரூ.10ஆயிரத்துக்கும், லயன் உளுந்தம் பருப்பு ரூ. 7,200- க்கும், உளுந்து ( நாடு) ரூ.7,200 க்கும், பட்டாணிப் பருப்பு (இந்தியா) மூட்டை ஒன்று ரூ.5,950- க்கும், வெள்ளைப் பட்டாணி பருப்பு ரூ.6,650-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. காபி உள்ளிட்ட மற்ற உணவுப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT