மதுரை

மதகுபட்டி அருகே வெளிமாநிலமதுப்புட்டிகள் பறிமுதல்: இளைஞா் கைது

5th Feb 2023 11:28 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 578 வெளிமாநில மதுப்புட்டிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

மதகுபட்டி அருகே ராஜீவ்காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநில மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக மதுரையில் உள்ள மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களின் அறிவுறுத்தலின் பேரில் சிவகங்கை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் நிதிக்குமாா், உதவி ஆய்வாளா் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுப்புட்டிகள் 578 இருப்பது தெரியவந்தது.

இவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் அந்த வீட்டில் வசித்து வரும் சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகாந்த்தை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT