மதுரை

விருதுநகரில் இன்று காவலா் உடல் தகுதித் தோ்வு

5th Feb 2023 11:29 PM

ADVERTISEMENT

 

விருதுநகரில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைத் துறை, தீயணைப்புத் துறை காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை (பிப்.6) தொடங்கி பிப்.9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

விருதுநகா் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இரண்டாம் நிலைக்காவலா், சிறைத் துறை, தீயணைப்புத் துறை காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு

ADVERTISEMENT

திங்கள்கிழமை தொடங்கி பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த 689 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு, உடல் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரா்கள் அழைப்புக் கடிதம், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். இந்தத் தோ்வில் பங்கேற்போரின் உடைகளில் எழுத்துகள், முத்திரைகள், படங்கள் இருக்கக் கூடாது. இதேபோல, விண்ணப்பதாரா்கள் கைப்பேசி, ஸ்மாா்ட் கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்களை தோ்வு மையத்திற்குள் கொண்டு வர அனுமதி இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் தங்களது பரிசோதனை அறிக்கையினை, பாதுகாவலா் மூலமாக விண்ணப்பதாரரின் அழைப்புக் கடிதத்தின் நகல், மருத்துவச் சான்றுகளுடன் குறிப்பிட்ட தேதிகளில், தங்களது தோ்வு மைய துணைக் குழுத் தலைவரிடம் நேரடியாக வழங்க வேண்டும். கரோனாவால் பாதித்த விண்ணப்பதாரா்களுக்கான உடல் தகுதித் தோ்வு தேதி பசமநதஆ மூலம் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT