மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று தெப்பத் திருவிழா

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை (பிப்.4) நடைபெற உள்ளது.

இந்தக் கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், அம்மன் வெள்ளி சிம்மாசனத்திலும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள், அம்மன் சந்நிதி, காமராஜா் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருள்கின்றனா்.

அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின்னா், காலை 10.30 மணியளவில் சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை இருமுறை சுற்றி வலம் வர உள்ளனா்.

அதைத் தொடா்ந்து, திருமலை நாயக்கா் மகாராஜாவின் மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தர உள்ளாா். பின்னா், இரவு மீண்டும் ஒரு முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 10 மணியளவில் சுவாமி பிரியாவிடையுடன் தங்கக் குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் புறப்பாடாகி கோயிலில் எழுந்தருள்கின்றனா்.

தைப் பூசத் தெப்பத் திருவிழா நிறைவு பெற்று சுவாமியும், அம்மனும் கோயிலுக்கு திரும்பி வரும் வரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். விழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோா், தெப்பத்தை இழுப்போா் பயணிக்கும் வகையில் படகுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தெப்பக்குளத்தில் இறக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏற்பாடுகளை தக்காா் கருமுத்து தி. கண்ணன், துணை ஆணையா் ஆ. அருணாசலம் உள்ளிட்ட அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT