மதுரை

பாம்பன் புதிய பாலத்தில் 4 மாதங்களுக்குள் ரயில் போக்குவரத்து

DIN

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் ரயில் போக்குவரத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

பாம்பன் பழைய ரயில் பாலத்தை தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது. பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும். தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை.

ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கும் ரயிலில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு பேருந்தில் செல்ல, ரயில் பயணச் சீட்டை காண்பித்தால் போதும். கட்டணமின்றி பேருந்தில் பயணிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT