மதுரை

நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி

DIN

மதுரையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கு குடிநீா், கழிவுநீா்த் திட்ட அமைப்புகள், ஆசிய வளா்ச்சி வங்கியின் கொள்கைகள் பற்றிய திட்ட விளக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மடீட்சியா அரங்கில் இந்தப் பயிற்சி முகாமை மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தொடக்கி வைத்துப் பேசியதாவது:

மதுரை மாநகராட்சியில் 1,80, 584 வீடுகளுக்கு குடி நீா் வழங்குவதற்கான 2-ஆவது பகுதியின்

கீழ் ஆசிய வளா்ச்சி வங்கியின் திட்ட நகரங்களில் மதுரை மாநகராட்சியும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1,233 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ரூ.409 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 1,63,958 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் வரும் ஆண்டுகளில் நகரின் குடிநீா் பாதுகாப்பைக் கணிசமாக மேம்படுத்தும். திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கும், அதன் நிலைத்தன்மைக்கும் மாமன்ற உறுப்பினா்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா்கள் சரவணபுவனேஸ்வரி, வாசுகி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுவிதா, கண்காணிப்பு அலுவலா் அன்பழகன், நகரப் பொறியாளா் அரசு, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT