மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா

DIN

சோலைமலை முருகன் கோயில் சனிக்கிழமை தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

மதுரை அருகே அழகா்மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

அன்னம், காமதேனு, ஆட்டுக் கிடாய், பூச்சப்பரம், யானை, பல்லாக்கு, குதிரை ஆகிய வாகனங்களிலும் தங்கத் தேரில் வெள்ளி மயில் வானத்திலும் சுவாமி எழுந்தருளினாா்.

இதில், முக்கிய நிகழ்வான தைப்பூசத்தை முன்னிட்டு, சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு பால் பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தா்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் வெங்கடாசலம், துணை ஆணையா் ராமசாமி, கண்காணிப்பாளா்கள், உள்துறை அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT