மதுரை

கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

DIN

திருமங்கலம் அருகே ஓ.ஆலங்குளம் கிராமத்தில் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் டாக்டா் நடராஜகுமாா், முகாமைத் தொடக்கிவைத்தாா். கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் டாக்டா் கிரிஜா, ஊராட்சித் தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லா நோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு இலவச ஸ்கேனிங், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளும் இந்த முகாமில் அளிக்கப்பட்டன.

உதவி மருத்துவா்கள் ஜான் சுரேஷ், கங்காசூடன், அருண் சங்கா், ஆமீனா, கோபிநாத், ஆய்வாளா் சசிரேகா, உதவியாளா் ஜானி பாட்சா ஆகியோா் சிகிச்சைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT