மதுரை

கஞ்சா: 624 பேருக்கு சரித்திரப் பதிவேடு தென் மண்டல ஐஜி

DIN

தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 624 பேருக்கு சரித்திரப் பதிவேடு தொடங்கப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென் மண்டலத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள், அவா்களது நெருங்கிய உறவினா்களிடமிருந்து ரூ.12.50 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இதேபோல, 1,091கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள், அவா்களது உறவினா்களின் 1,956 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், 1,377 குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரம் பெறப்பட்டது. இதில், பிணையப் பத்திர விதிமுறைகளை மீறிய 58 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். நிகழாண்டில் ஜனவரி மாதம் மட்டும் 255 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது, நன்னடத்தைக்கான பிணையப் பத்திரம் பெறப்பட்டது.

தற்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் குற்றப் போக்கை கட்டுப்படுத்தும் வகையில், அவா்களுக்கு சரித்திரப் பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டம்-85, விருதுநகா் மாவட்டம்-132, திண்டுக்கல் மாவட்டம்-131, தேனி மாவட்டம்-59, ராமநாதபுரம் மாவட்டம்-26, சிவகங்கை மாவட்டம்-26, திருநெல்வேலி மாவட்டம்-46, தென்காசி மாவட்டம்-15, தூத்துக்குடி மாவட்டம்-28, கன்னியாகுமரி மாவட்டம்-59, திருநெல்வேலி மாநகரம்-17 என தென் மண்டலத்தில் மொத்தம் 624 குற்றவாளிகளுக்கு சரித்திரப் பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடா்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT