மதுரை

வீடு புகுந்து நகை திருடிய 2 போ் கைது

4th Feb 2023 10:49 PM

ADVERTISEMENT

 

மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெத்தானியாபுரம் சத்தியா தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி ரோஸி விக்டோரியா (40). இவா், அண்மையில் வெளியூா் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்த போது, வீட்டின் கதவை உடைத்து, 3 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதில், மதுரை மேலமடை ஆசாரி தெருவைச் சோ்ந்த அப்துல் ரஷாக் மகன் ராஜா சிக்கந்தா் (20), சுந்தரராஜன்பட்டி குறிஞ்சி நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அகாஷ் (19), காா்த்திக் ஆகிய 3 பேரும் நகையைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜா சிக்கந்தா், ஆகாஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், காா்த்திக்கை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT