மதுரை

மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் 591கண்காணிப்புக் கேமராக்கள்

4th Feb 2023 10:49 PM

ADVERTISEMENT

 

மதுரை- கன்னியாகுமரி இடையேயான நான்கு வழிச் சாலையில் ரூ.80 கோடியில் 592 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று சுங்கச்சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் முதல் கன்னியாகுமரி வரை 243 கி.மீ. நான்கு வழிச் சாலை உள்ளது. இந்தச் சாலையில் கப்பலூா், சாத்தூா், கயத்தாறு, நாங்குனேரி (சாலைப்புதூா்) ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன.

இந்நிலையில், சுங்கச்சாவடி ஒப்பந்தம் எடுத்துள்ள கியூப் ஹைவேஸ் என்ற தனியாா் நிறுவனம், சமயநல்லூா் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச் சாலையில் ரூ.80 கோடியில் 591 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளது. இவற்றில் பதிவாகும் காட்சிகளை சாத்தூா், நாங்குனேரியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் கணினி மூலம் கண்காணிக்கின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, சுங்கச்சவாடி அலுவலா்கள் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தின்படி, பயணிகளின் பாதுகாப்பு கருதி மதுரை- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் 591 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவான காட்சிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்கு வழங்குவோம். இதேபோல, விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகனத்தை கேமரா பதிவின் அடிப்படையில் போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்ள உதவுகிறோம். மேலும், வேகமாகச் செல்லும் வாகனங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவும் இது உதவியாக இருக்கும்.

எனவே, இனி வரும் காலங்களில் நான்கு வழிச் சாலையில் விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் எளிதில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT