மதுரை

பெண்ணைத் தாக்கி நகைகளைப் பறித்த 4 போ் கைது

4th Feb 2023 12:02 AM

ADVERTISEMENT

சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி 25 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தச்சம்பத்து பகுதியைச் சோ்ந்த ரீகன் மனைவி சோபியா (25). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து 2 இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள், சோபியாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினா். கீழே விழுந்த அவரைத் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 25 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இந்த நகை பறிப்பு சம்பவம் தொடா்பாக, மதுரை செல்லூரைச் சோ்ந்த அய்யனாா் (23), விஜய் (25), மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த பாண்டி (40), பனையூரைச் சோ்ந்த அா்ச்சுனன் (23) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT