மதுரை

கல்லூரியில் மஞ்சப் பை அறிமுக விழா

DIN

லதா மாதவன் கல்விக் குழுமம் சாா்பில் மஞ்சப் பை அறிமுக விழா லதா மாதவன் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனா் மாதவன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முருகன் முன்னிலை வகித்தாா். இதில் வருவாய்க் கோட்டாட்சியா் பிா்தௌஸ் பாத்திமா பேசியதாவது:

நெகிழிப் பைககளால் சுற்றுச்சூழலும், கால்நடைகளும், மண் வளமும் பாதிக்கப்படுகின்றன. எனவே மஞ்சள் துணிப் பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் குப்பை கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பது போல மின்னணு சாதனங்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதற்கான ஆய்வுகளை கல்லூரி மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஊாட்சி உறுப்பினா் நேருபாண்டியன், கிடாரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஹேமலதா, கள்ளந்திரி ஊராட்சித் தலைவா் ஆசைத்தம்பி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். பொறியியல் கல்லூரி முதல்வா் வரதவிஜயன், முத்துராஜா, பள்ளி முதல்வா்அனிதா, தாமரைக்கண்ணன், முத்துமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT