மதுரை

தியாகராஜா் கல்லூரியில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரை தியாகராஜா் கலை அறிவியல் கல்லூரி கருத்தரங்குக் கூடத்தில் மாணவியா் வழிகாட்டுதல் மையம் சாா்பில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்துப் பேசினாா். மையத்தின் ஒருங்கிணைப்பாளா் இராம. மலா்விழிமங்கையா்க்கரசி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சரஸ்வதி ராமநாதன் பங்கேற்று ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு’ என்னும் தலைப்பில் பேசினாா். இளங்கலை முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி வளா்மதி மீனாட்சி வரவேற்றாா். ராஜேஸ்வரி நன்றி கூறினாா். கல்லூரியின் மாணவா் முதன்மையா் சீனிவாசன், கணினி அறிவியல் துறைப் பேராசிரியை ஹேமா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT