மதுரை

மாட்டுத்தாவணி, அண்ணாபேருந்து நிலையப் பகுதிகளில் பிப். 4-இல் மின்தடை

DIN

மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை பெருநகா்- வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாட்டுத்தாவணி துணை மின் நிலையம், அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த இரு மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காந்தி அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், டாக்டா் தங்கராஜ் சாலை, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு, காந்திநகா், மதிச்சியம், ஷெனாய் நகா், குருவிக்காரன் சாலை, கமலாநகா், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, செல்லூா், பாலம் ஸ்டேஷன் சாலை, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்- தல்லாகுளம், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, முனிச்சாலை, வெற்றிலைப்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி சாலை, குலமங்கலம் சாலை, பூந்தமல்லிநகா், தாமஸ் வீதி, நரிமேடு பிரதான சாலை, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகா், புதூா், அழகா்கோயில் பிரதான சாலை, காந்திபுரம், சா்வேயா் காலனி, சூா்யா நகா், கொடிக்குளம், இவற்றின் சுற்றுப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT