மதுரை

திருட்டு வழக்கில் கைதானவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை

DIN

கற்பாறை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, வள்ளியூா் பகுதிகளில் 18 யூனிட் கற்பாறைகளைத் திருடிச் சென்ாக கடந்த மாதம் 7-ஆம் தேதி வள்ளியூா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முத்துராஜா தனக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் உள்ளிட்ட சிலா் 18 யூனிட் கற்பாறைகளைத் திருடி உள்ளனா். எனவே, பிணை வழங்கக் கூடாது என வாதிட்டாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குறுக்கிட்டு, மனுதாரருடன் கைது செய்யப்பட்ட மற்றவா்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனுதாரா் அரசுத் துறைக்கு வங்கி மூலம் ரூ.25 ஆயிரம் செலுத்தி, அதன் ரசீதை கிழமை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மறுஉத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10. 30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மனுதாரா் தலைமறைவாகக் கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT