மதுரை

ஈசனூா் செருவலிங்க அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே ஈசனூரில் அமைந்துள்ள செருவலிங்க அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த ஜன. 29-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேசுவரா் பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினசரி காலை, மாலை ஆகிய வேளைகளில் கணபதி ஹோமம், முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள், லட்சுமி பூஜைகள், நவக்கிரக பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, விக்னேசுவர பூஜை, சோம கும்ப பூஜை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், கோ பூஜைகள், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, காலை 10 மணியளவில் யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தன. காலை 10.30 மணியளவில் மூலவரான செருவலிங்க அய்யனாா் விமானம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பங்களுக்கு புனித நீா் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின்னா், செருவலிங்க அய்யனாருக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

ADVERTISEMENT

விழாவில், குலதெய்வ பாத்தியதாரா்கள், ஈசனூா், சிவகங்கை, சோழபுரம், மதுரை, மேலூா், ஒக்கூா் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT