மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் சட்டத் தேரில் பவனி

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் 9- ஆம் நாளான புதன்கிழமை சட்டத் தோ் பவனி நடைபெற்றது.

இந்தகோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இந்த நிலையில், சட்டத் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சட்டத் தேரில் சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனியாகவும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனா். இதில், மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் அா்ச்சனை செய்தும், மாலை சாத்தியும் வழிபட்டனா். அதைத் தொடா்ந்து, மாலையில் தெப்பம் தலையலங்கார முகூா்த்த விழா நடைபெற்றது. அதன்பின், இரவு சப்தாவா்ண சப்பரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT