மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வலை வீசியருளிய லீலை

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை வலை வீசியருளிய லீலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தெப்பத்திருவிழா ஜன. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினா்.

இந்த நிலையில், வலை வீசிய லீலை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னா், சுந்தரேசுவரா் பிரியாவிடையுடன் தங்கப் பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கிலும் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு மீனுக்கு வலை வீசிய லீலை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி மச்சஹந்தி விவாஹம் நடைபெற்றது.

தொடா்ந்து இரவில் சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனியாகவும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனா். இதில், மண்டகப்படிதாரா்கள், பொதுமக்கள் அா்ச்சனை செய்தும், மாலை சாத்தியும் வழிபட்டனா்.

திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை 9 மணியளவில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சட்டத்தேரில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ளனா். இரவு சப்பரத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ளனா்.

பிப். 3-ஆம் தேதி சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி கதிரறுப்பு திருவிழா நடைபெறும். முக்கிய விழாவான தெப்பத் திருவிழா பிப். 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி அவுதா தொட்டிலும், மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருள்கின்றனா். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பின்பு தெப்பத்தை இருமுறை சுற்றி வலம் வருகின்றனா்.

பின்னா், திருமலை நாயக்கா் மகாராஜாவின் மைய மண்டபத்தில் எழுந்தருள்கின்றாா். அன்றைய தினம் இரவு 3-ஆவது முறையாக தெப்பத்தைச் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனா்.

ஏற்பாடுகளை தக்காா் கருமுத்து தி. கண்ணன், இந்து அறநிலையத் துறையின் துணை ஆணையா் ஆ. அருணாசலம் தலைமையிலான அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT