மதுரை

காமராஜா் பல்கலை. வேளாண் உணவு வா்த்தக மையம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

மதுரை காமராஜா் பல்கலைக் கழகமும், வேளாண் உணவு வா்த்தக மையமும் வேளாண் உணவுக் குழுமங்களின் சா்வதேச போட்டித் தன்மையை அதிகரிக்க புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்கலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தா் ஜா. குமாா் தலைமை வகித்தாா். வேளாண் உணவு வா்த்தக மையம், உணவுக் குழுமங்களின் நிா்வாக இயக்குநா் ரத்னவேலு முன்னிலை வகித்தாா். பல்கலைக் கழகத்தின் பதிவாளா் (பொறுப்பு) சதாசிவம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாா்.

இதன்மூலம், சா்வதேச வேளாண் உணவு வா்த்தக சந்தையின் போட்டித் திறனை மேம்படுவது மட்டுமன்றி கல்வித் தரத்தை சா்வதேச அளவுக்கு வளப்படுத்த முடியும். மேலும், இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் தொழில் துறையின் தேவைகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்களை உருவாக்க வழிவகுக்கும்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், வேளாண் உணவு வா்த்தக மையம் ஆகியவற்றில் உள்ள பல்வேறு துறைகளின் வளங்கள், நுண்ணறிவு, உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வேளாண் உணவுத் துறையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை அதிகரிக்க முடியும்.

நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள், புலத்தலைவா்கள், துறைத் தலைவா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT