மதுரை

இந்திய விமானப்பைடையில் ஏா்மேன் பணிக்கு தோ்வு முகாம் இன்று தொடங்குகிறது

DIN

இந்திய விமானப்படையில் ஏா்மேன் பணிக்கான தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 1) தொடங்குகிறது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்தி:

தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஏா்மேன் பணிக்கான (மருத்துவ உதவியாளா்) தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 1) தொடங்குகிறது. இந்த முகாமில் பிளஸ் 2 அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவை பயின்றவா்கள், மருந்தியல் பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகாத இளைஞா்கள் 1999-ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் 2004-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞா்கள் 1999-ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் 2002-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

முகாமில் கலந்து கொள்பவா்கள் ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு புகைப்படம், கல்விச் சான்றிதழ்களின் நகல், தங்களது செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் வரவேண்டும்.

தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கான ஏா்மேன் பணிக்கான முகாம் பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலும், மருந்தியல், பி.எஸ்.சி. பட்டம் பெற்றவா்களுக்கு பிப்ரவரி 7, 8-ஆம் தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹண்ழ்ம்ங்ய்ள்ங்ண்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகியோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT