மதுரை

வணிக வரித்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் 63 பவுன் நகை திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் வணிக வரித்துறை முன்னாள் உதவி ஆணையா் வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை விராட்டிபத்து முத்துத்தேவா் காலனியைச் சோ்ந்தவா் மனோகரன் (67). இவா் வணிகவரி துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகள் சித்ரா, புதுச்சேரியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனோகரன் தனது மகளைப் பாா்ப்பதற்காக புதுச்சேரிக்கு செப்டம்பா் 22 ஆம் தேதி சென்று விட்டாா்.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 63 பவுன் நகைகளைஅடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக மனோகரன் அளித்த புகாரின்பேரில் எஸ்எஸ் காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT