மதுரை

சரக்கு வாகனங்களை சேதப்படுத்திய கும்பல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை பாலரங்கபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு நிறுத்தியிருந்த சரக்கு வாகனங்களை அடித்து சேதப்படுத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை காமராஜபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த வீரபாண்டி, பிரபு மற்றும் திருப்பதி ஆகிய மூவரும் சொந்தமாக சரக்கு வாகனங்கள் வைத்துள்ளனா். இவா்கள் தங்களது சரக்கு வாகனங்களை வழங்கம்போல பாலரெங்கபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு நிறுத்திவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனா்.

நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள் மூன்று சரக்கு வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினா். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT