மதுரை

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

29th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

 மதுரை அருகே புதன்கிழமை இரவு, பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் வளா் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பூா்ணிமா தேவி (32). இவா் மதுரை முடக்குச்சாலையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசுப் போட்டித் தோ்வுக்குத் பயிற்சி பெற்றுவருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு பயிற்சி வகுப்பு முடிந்த நிலையில், சமயநல்லூா் வைகை ஆற்றுப் பாலம் வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பூா்ணிமா தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT